திங்கள், 9 ஜூலை, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 
33:21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.318
சிபாரிசினால் சீரழியும் சமுதாயம்
கடந்த கட்டுரையில் மூஸா(அலை) அவர்களின் கோபத்தையும், ஹாரூன்(அலை) அவர்களின் பொருமையையும் பார்த்தோம்.

எதிராளியுடைய கோபம் நியாயமானதாக இருந்தால், நன்மை பயக்கக் கூடியதாக இருந்தால் அதை நாம் கண்டிப்பாக சகித்துக் கொள்ள வேண்டும். மாறாக உனக்கு மட்டும் தான் கோபம் வருமா ? எனக்கும் கோபம் வரும் பார் ! என்று அவருடைய கோபத்திற்கு நிகராக அல்லது அதை விட அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தினால் அது கண்டிப்பாக ஷைத்தானுக்கு சாதகமாகவே அமைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் நபிமார்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டப்படுவதன் நோக்கமெல்லாம் அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவதற்காக அல்லாமல் வெறுமனே படித்து விட்டு விடுவதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் அமைந்தது தான் மூஸா(அலை) அவர்களின் கோபமும், ஹாரூன்(அலை) அவர்களின் பொருமையும்.

சிபாரிசு
பொருமையின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சில நேரங்களில் கடுமையான கோபம் கொண்டதுண்டு அந்த கோபம் தீனுடைய வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் நலனுக்காகவுமே அமைந்திருக்கும். மாறாக அவர்களின் சொந்த விஷயத்திற்காக இருக்காது என்பதை அவர்களின் அப்பழுக்கற்ற வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள்.

அண்ணல் அவர்களின் தோளில் கிடந்த தடிமனான துணியை ஒரு கிராமவாசி பிடித்து இழுத்து ஜகாத் நிதியிலிருந்;து உணவுப் பொருட்களை அதிகாரத் தோரனையுடன் கேட்ட பொழுது அது அவர்களின் மேனியையே சிவந்து விடும் அளவுக்கு ஆக்கியப் பிறகும் அதற்காக அண்ணல் அவர்கள் சிறிதளவும் அவர் மீது கோபம் கொள்ள வில்லை.

யூதர் ஒருவர் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து அண்ணல் அவர்களிடம் கொடுத்தக் கடனை பலர் பாரக்கும் வண்ணம் திருப்பி கேட்ட பொழுது அதற்காகவும் அண்ணல் அவர்கள் அவர் மீது கோபம் கொள்ள வில்லை. இது போன்று பல சம்பவங்கள் அண்ணல் அவர்களின் சொந்த வாழ்க்கையில் நடந்துள்ளன அதற்கெல்லாம் அவர்கள் கோபம் கொண்டதே இல்லை.

ஆனால் யாராவது தன்னுடைய சுயநலனுக்காக செய்யும் செயல் அது மார்க்க வளர்ச்சிக்கு இடையூறாக சமுதாய சீரழிவுக்குக் காரணமாக அமையுமென்றால் அதற்காக மட்டுமே கோபம் கொள்வார்கள். இதை அருமை நபி(ஸல்) அவர்களுடைய ஆருயிர் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில்(விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக ! தீங்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு,(அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர. ஆதாரம் புகாரி 6786 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

வரலாற்றில் ஓர் நாள்.
மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமாவின் திருட்டுக்கான கை துண்டிக்கப்படும் தண்டனையை ரத்து செய்யும் படி உஸாமா பின் ஸைது(ரலி) அவர்கள் அண்ணல் அவர்களிடம் சிபாரிசு செய்த பொழுது அதைக் கேட்டதும் அமைதியே உருவான அண்ணல் அவர்களுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டு அது அவர்களுடைய முகத்தின் நிறத்தையே மாற்றி விட்டது.

உஸாமாவே அல்லாஹ்வின் சட்டத்திலா பரிந்து பேச வந்திருக்கிறாய் ? அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றி அமைக்க நினைக்கிறாயா ? என்று கோபத்துடன் கேட்டதும் அண்ணல் அவர்களுடைய முகத்தைப் பார்த்த உஸாமா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வுடைய அச்சம் ஏற்பட்டு விடுகிறது.

எத்தனைப் பெரிய தவறை செய்ய துணிந்து விட்டோம் என்று வருந்திய உஸாமா(ரலி) அவர்கள் அண்ணல் அவர்களிடம் மறு பதில் பேசாமல் இறைத்தூதர் அவர்களே மார்க்கத்திற்கு நான் இழைக்க நினைத்த இந்த மாபெரும் தவறுக்;காக அல்லாஹ்விடம் எனக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள் என்றுக் கூறி சஞ்சலப் படுகிறார்கள்.

 ('மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் (திருடியபோது) தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது) தொடர்பாக உசாமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவே தான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே இ(ந்தக் குற்றத்)தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்'' என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 6787, முஸ்லீம் 3486.

தீமையின் பிறப்பிடம் திருட்டு.
சமுதாயத்தை சீரழிக்கும் மொத்த தீமைகளுக்கும் முன்னோடி தீமையாக அமைவது திருட்டு திருட்டின் மூலம் ஈட்டுகின்றப் பொருளாதாரத்தை வைத்துத் தான் எவ்வித சலணமுமின்றி சூதாடுகிறான், தண்ணி அடிக்கிறான், விபச்சாரம் செய்கிறான்.

இதைப் பார்த்து முறையாக பொருளீட்டும் உழைப்பாளிகளும் கூட சில நேரங்களில் இந்த தீமையில் சறுக்கி விழுந்து ஹலாலானப் பொருளாதாரத்தை இழந்து அது போதாமல் கடன் பெறும் நிலை உருவாகிறது, கடன் கிடைக்காத சூழ்நிலையில் வட்டிக்கு வாங்கும் நிலை உருவாகிறது.

சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளை அனுபவிப்பதற்கு வழித் தடமாக அமைவது திருட்டு, திருட்டு என்ற வழித் தடம் முழுமையாக அடைக்கப்பட்டு விட்டால் திருட்டின் வழியாக நுழையக்கூடிய தீமைகள் முற்றாக முடக்கப் பட்டு விடும்.

திருட்டை முற்றாக ஒழிப்பதற்கு திருடும் கைகளை துண்டிக்கக் கூறும் அல்லாஹ்வின் சட்டம் தான் ஒரே வழி.

5:38. திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.43

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய ஆட்சிகாலம் வரை திருட்டுக்கான தண்டனை பாரபட்சமற்ற முறையில் நிறைவேற்றப்பட்டு வந்ததால் அவர்களுடைய ஆட்சி காலம் இல்லாத பொற்காலமாகவும், அச்சமற்ற காலமாகவும் இருந்தது.

உடன்படிக்கை.
சமுதாயம் சீரழிந்து நாசமாவதற்கு திருட்டு மிகப் பெரும் பங்கு வகிப்பதால் தான் அண்ணல் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்க வரும் மக்களிடம் இஸ்லாத்திற்குள் வருவதாக இருந்தால் திருட்டை விட்டு விட வேண்டும் என்ற உறுதிமொழியை வாங்கிக் கொண்டு உள்ளே எடுத்தார்கள். முஹம்முது இஸ்லாத்தை வாளால்பரப்பினார் என்று அவதூறு பிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய விரோதிகள் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.
நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன் அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை, திருடுவதில்லை, குழந்தைகளைக் கொல்வதில்லை, உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை, எந்த நற்செயலிலும் எனக்கு மாறு செய்வதில்லை'' என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்குகிறேன்... புகாரி 6801 உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.

அவர்களுக்குப் பின் ஆட்சி செய்த கலீஃபாக்கள், சாஹாபாக்கள் அதைப்போன்றே ஆட்சி செய்த காலம் வரை பாரபட்சமற்ற முறையில் அல்லாஹ்வின் சட்டத்திலிருந்து குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றபட்டு வந்த காலம் வரை அதுவும் சமூக சீரழிவு இல்லாத பொற்காலமாகவும், அச்சமற்ற காலமாகவும் இருந்தது அதற்காகவே திருட்டு மற்றும் இன்ன பிற குற்றச் செயல்களுக்கு அதிகபட்சம் அரபு நாடுகளை உலகம் முழுவதிலும் உதாரணம் காட்டிய நிலை இருந்தது.

இன்று அதே அரபு நாடுகளில் திருட்டு மற்றும் இன்;ன பிற குற்றச் செயல்களுக்கு அல்லாஹ்வின் சட்டத்திலிருந்து தண்டனைகள் நிறைவேற்றப்படுவது குறைந்து விட்டதால் பிற சமுதாயத்தவர்களைப் போன்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்;காக உத்தியோத்தில் இருப்போர் கையூட்டுகள் பெறுகின்றனர், உத்தியோகத்தில் இல்லாதோர் திருடுகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அரபிகள் திருடினால் அல்லது இன்ன பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் பெரிய இடத்து சிபாரிசுகள் மூலம் தண்டனை முற்றாக தடுக்கப்பட்டு விடுகிறது. இதே அன்னிய நாட்டவர் திருடினால் அல்லது இன்ன பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக தண்டனை நிறைவேற்றப் பட்டு வருகிறது அல்லது கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு சிறையிலிருந்து கைதியாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

கொலைவெறி தாக்குதல்
திருட்டு விஷயத்தில் சிபாரிசின் அடிப்படையில் தண்டனை ரத்து செய்யப்பட்டு வருவதாலும், தாய் நாட்டவர், அன்னிய நாட்டவர் என்ற பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாலும் நாட்டுக்குள் திருட்டு அதிகமாகி விட்டது இதனால் வெளிநாட்டவர் வேலை முடிந்து வெளியில் தனித்து நடப்பதே கேள்விக்குறியாகி விட்டது.

சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்பும் நோக்கிலோ அல்லது பொருட்கள் வாங்கும் நோக்கிலோ கையில் எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பி நோக்கம் நிறைவேறி தங்குமிடத்திற்கு திரும்பி வரும் வரை பணத்துக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை, பணத்தினால் உயிருக்கே உத்தரவாதம் இல்லை எனும் நிலையும் உருவாகி விட்டது.

திருடர்கள் வளைத்துப் பிடித்து விட்டால் கையில் உள்ளதை, பையில் உள்ளதை தாமாக எடுத்துக் கொடுத்து விட வேண்டும் தயங்கினால் தாக்குதல் நடத்துவர். கையிலோ, பையிலோ நிஜமாகவே எதுவும் இல்லை என்றால் ஏன் கொண்டு வரவில்லை என்று தாக்குதலின் வேகம் அதிகரித்து விடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன போலீஸில் புகார் செய்தால் திருட்டு தொடர்பான புகார்கள் அதிகம் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

இதனால் பிற நாடுகளில் நடப்பது போலவே இஸ்லாத்தால் தடுக்;கப்பட்டத் தீமைகள் மறைமுகமான முறையில் அரபு நாடுகளிலும் அதிகரித்து விட்டன அதனால் நாடு சீரழிந்து அச்சமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அர்த்தமுள்ள கோபம்
அண்ணல் அவர்கள் அடிக்கடி கோபம் கொள்ள மாட்டார்கள் அதிகம் புன்னகைப் பூப்பவர்களாகவே இருப்பார்கள் என்றாவது எதாவது ஒரு விஷயத்திற்காக கோபம் கொண்டார்கள் என்றால் கண்டிப்பாக அதில் அர்த்தம் இருக்கும் சமுதாய நலன் இருக்கும் மறுமைக்கான வெற்றி இருக்கும் என்பதை அண்ணல் அவர்களின் குடும்பத்தாரும் மக்களும் விளங்கிக் கொண்டு அண்ணல் அவர்கள் எந்த செயலுக்காக கோபம் கொண்டார்களோ அந்த செயலிலிருந்து உடனடியாக தவ்பா செய்து மீளுவதற்கு தயங்க மாட்டார்கள்.

அதனால் தான் அண்ணல் அவர்களின் முகம் கோபத்தால் மாறியதும் உஸாமா(ரலி) அவர்களுக்கு தான் செய்ய எண்ணியது மிகப்பெரிய குற்றம் என்பதை உணர்த்தியது அதனால் தான் உஸாமா(ரலி) அவர்கள் மறு பதில் பேசாமல் அல்லாஹ்விடம் எனக்காக மன்னிப்புக் கேட்டு விடுங்கள் என்றுக் கூறினார்கள்.

மேற்காணும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய பன்பு பொறுப்பிலுள்;ள ஒவ்வொருவருக்கும் இருந்தாக வேண்டும் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவராக இருந்தால் ஒரு நாள் தீமையை கண்டித்து கடுமையாக கோபம் கொள்ளும் போது அந்த கோபம் டம்மியாகி விடலாம். இவருக்கு இது தான் வேலை எப்பொழுது பார்த்தாலும் கடுப்படித்துக் கொண்டே இருப்பார் என்று அலச்சியம் செய்யும் நிலை எற்படலாம்.

மனிதன் உலகில் மனிதனாக வாழ்வதற்கு தேவையான எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில்; அண்ணல் அவர்களிடம்; முன்மாதிரி இருக்கும் அதனால் தான் அகில உலக அதிபதியாகிய அல்லாஹ் தன் திருமறையில் அகிலம் முழுவதும் உள்ள மக்கள் பின்பற்றி வாழ்வதற்கு தேவையான பண்புகள் தன் தூதரிடம் இருப்பதாக சொல்லிக் காட்டுகிறான்.

  • ம் முழுவதிலுமுள்ள ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மேற்காணும் அகிலம் போற்றும் உத்தமர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை பின் பற்றினால்,
  • திருட்டுக்கும் இன்னும் பிற குற்றச் செயல்களுக்கும் அதிகாரிகளிடம் சிபாரிசு செய்யச் செல்பவர்கள் நிருத்திக் கொண்டால் ஒவ்வொரு நாடும் சமூக சீரழிவு இல்லாத பொற்காலமாகவும், அச்சமற்ற காலமாகவும் மாறும். 
33:21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.318


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக